search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள் கைது"

    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று வழிதெரியாமல் தவித்த 2 இந்தியர்களை ரோந்துப் படையினர் மீட்டு கைது செய்தனர். #IndianNationals
    நியூயார்க்:

    அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மீட்பு சிக்னல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து, தொலைபேசி மூலம் 911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது மீட்பு சிக்னலை ஆக்டிவேட் செய்தோ உதவி கேட்கலாம். இதன்மூலம் ஏராளமான அகதிகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவ்வகையில், கடந்த புதன்கிழமை அரிசோனா மாநிலத்தில் உள்ள மீட்பு சிக்னல் டவரில் இருந்து சிக்னல் வந்துள்ளது. இதையடுத்து எல்லை ரோந்துப் படை போலீசார் அங்கு சென்று, சிக்னல் டவர் அருகே வழிதெரியாமல் தனியாக நின்றிருந்த 2 நபர்களை மீட்டனர்.

    விசாரணையில் அவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது.

    இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவ உதவி எதுவும் தேவையில்லை என்றும் அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்னர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #IndianNationals
    உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. #2382Indians#IndiansinUSjails #USbordercrossing
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக  தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

    வடஅமெரிக்காவில் வாழும் பஞ்சாபிகள் சங்கம் மூலம் பெறப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சொந்த நாட்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு பயந்து இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைய வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

    30 முதல் 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் அமெரிக்க குடியுரிமை பெற்று தருவதாக போலி வாக்குறுதி அளிக்கும் சில தரகர்களின் மாயவலையில் விழும் இந்தியர்கள் இங்கு அடைக்கலம் தேடிவந்து குடியுரிமைத்துறை அதிகாரிகளிடன் பிடிபட்டு, சிறையில் அடைபட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. #2382Indians#IndiansinUSjails  #USbordercrossing 
    சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Trump

    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக நுழைந்து குடியேறுகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் டிரம்ப் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

    அமெரிக்க சுங்க இலாகா மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இருந்தும் ஊடுருவும் வெளி நாட்டினரின் எண்ணிக்கை குறையவில்லை.

    அவர்களில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலானோர். அவர்களை தொடர்ந்து கவுதமலா, ஹோண்டுராஸ் மற்றும் எல்சால்வேடர் நாடுகளை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக நுழைகின்றனர். இவர்களுக்கு அடுத்த படியாக இந்தியர்கள் நுழைவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    மெக்சிகோ எல்லை வழியாக நுழையும் இவர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு மனு செய்கின்றனர். அதில் வேறு சாதி அல்லது மதத்தினரை திருமணம் செய்ததால் கொலை மிரட்டல் வருவதாகவும் எனவே அடைக்கலம் தரும்படியும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    2012 முதல் 2017-ம் ஆண்டு வரை அடைக்கலம் கேட்ட 42 சதவீத இந்தியர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதேநேரத்தில் 79 சதவீதம் எல்சால்வேடர் நாட்டினரின் மனுவும், 78 சதவீதம் ஹோண்டுராஸ் நாட்டினரின் மனுவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அங்கு குடியேறிய 9 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த ஆண்டில் 3,162 பேர் கைதாகினர். இந்த தகவலை அமெரிக்க சுங்க இலாகா மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் சால்வேடர் ‌ஷமோரா தெரிவித்துள்ளார். #Trump

    இந்தியா -இலங்கை மகளிர் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து இந்தியர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
    இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் அடைந்தது. 3 போட்டி கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நேற்று நடந்த 3-வது போட்டியின்போது கட்டுநாயகே மைதானத்தில் 5 இந்தியர்கள் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை இலங்கை கிரிக்கெட் அணியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×